மழைப்பொழிவு குறைந்தால் வேளாண்மை சார்ந்த இந்திய பொருளாதாரத்துக்குப் பேரழிவு ஏற்படும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் பயிரிடும் பரப்பில் 60 விழுக்காடு பருவமழையால் பாசனம் பெறுகிறது.
மக்கள் தொகையில் பாதிப்பேர் நேரடியாகவோ மறைமுகமாகவோ வேளாண்மையைச் சார்ந்துள்ளனர். இந்த ஆண்டில் வழக்கமான அளவு மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஜூன் பாதிவரை பருவமழை மெதுவாகவே முன்னேறியுள்ளது.
மழையளவும் குறைவாகவே உள்ளது. இதனால் நெல்விதைப்பு தாமதமாகிப் பயிரிடும் பரப்பு குறைந்து நாட்டின் உணவுப் பாதுகாப்பில் கடும் எதிர்விளைவுகள் ஏற்படுமோ என அச்சம் ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.