​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காரில் வந்து அலேக்காக ஆட்டை திருடிச் சென்ற லுங்கி திருடன்

Published : Jun 19, 2022 4:13 PM



காரில் வந்து அலேக்காக ஆட்டை திருடிச் சென்ற லுங்கி திருடன்

Jun 19, 2022 4:13 PM

தூத்துக்குடி திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில் காரில் வந்த மர்மகும்பல் வீதியில் இருந்த ஆட்டை திருடிச்செல்லும் காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளன.

தெரு ஒன்றில், வீட்டின் முன்பாக 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் இருந்தன. அந்த வழியாக காரில் வந்த மர்மகும்பலில் ஒருவன் ஒருபக்க கதவை திறந்து சென்று ஒரு ஆட்டை பிடித்து காரில் ஏற்றினான்.

இதைப்பார்த்து குடியிருப்புவாசிகள் அந்த காரை துரத்திச்செல்ல முயன்ற போது அந்த கும்பல் காரில் வேகமாக தப்பிச்சென்றுள்ளது.

சில நாட்களாகவே அப்பகுதியில் தொடர்ச்சியாக ஆடுகள் திருட்டுப்போவதாக கூறும் பொதுமக்கள், நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.