டெஸ்லா மின்சாரக் கார் நிறுவனத்தை இந்தியாவில் தொழில் தொடங்க வரவேற்பதாகவும், அதே நேரத்தில் அந்நிறுவனம் அரசின் சட்டத் திட்டங்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே தெரிவித்துள்ளார்.
டெஸ்லா மின்சாரக் கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்ய வரியைக் குறைக்க வேண்டும் என அந்நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் தொடர்ந்து கோரி வருகிறார்.
கார்களை விற்கவும், சேவை செய்யவும் அனுமதிக்காதவரை இந்தியாவில் மின்சாரக் கார் உற்பத்தி செய்யப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே, இந்தியாவில் உற்பத்தி, தற்சார்பு ஆகிய கொள்கைகளில் சமரசம் செய்துகொள்ள முடியாது எனத் தெரிவித்தார்.