அமெரிக்காவில் டெலவர் கடற்கரை சாலையில் சைக்கிளிங் சென்ற அதிபர் பைடன் கால் இடறி கீழே விழுந்தார்.
வாரயிறுதி விடுமுறையை கொண்டாட ரெகபோத் கடற்கரை சாலையில் அதிபர் பைடன் சைக்கிளிங் சென்றார்.
ஆதரவாளர்கள் மற்றும் செய்தியாளர்களுடன் பேச சைக்கிளை நிறுத்திய போது, திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
கால் மூட்டு பகுதியில் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.