திகைப்பூட்டும் மியூசிக்கல் ஸ்கூட்டரின் வீடியோவை தொழிலதிபரும், மகேந்திர குழுமத்தின் தலைவருமான ஆனந்த் மகேந்திரா வெளியிட்டுள்ளார்.
பெட்ரோல் பங்கில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரில் பொருத்தப்பட்ட செல்போனில், பாலிவுட் நடிகர் ராஜேஸ் கன்னாவின் ஒர் பாடலின் வீடியோ ஓடிக் கொண்டிருந்தது.
கலைநயமிக்க இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் மட்டும் கிடைக்கும் என்றும் நீங்கள் விரும்பும் வாழ்க்கை வண்ணமயமாகவும், பொழுதுபோக்காகவும் இருக்கும் என்றும் ட்விட்டரில் ஆனந்த் மகேந்திரா கூறியுள்ளார்.