எலியை அடிக்க விரட்டிய பெண்ணுக்கு, மகனின் முன்னால் நிகழ்ந்த சோகம்.. மாரடைப்பால் பலியான சிசிடிவி காட்சி..!
Published : Jun 18, 2022 4:30 PM
எலியை அடிக்க விரட்டிய பெண்ணுக்கு, மகனின் முன்னால் நிகழ்ந்த சோகம்.. மாரடைப்பால் பலியான சிசிடிவி காட்சி..!
Jun 18, 2022 4:30 PM
பம்மல் அருகே வீட்டுக்குள் புகுந்த எலியை அடிப்பதற்காக கையில் கம்புடன் துரத்தி சென்ற பெண் மங்கி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் சிசிடிவி காட்சி வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பம்மல் அடுத்த பொழிச்சலூர் பாபு தெருவை சேர்ந்தவர் செந்தில் லோடு வேன் ஓட்டுனராக உள்ளார். இவரது மனைவி லட்சுமி இந்த தம்பதியருக்கு 12 வயதில் மகன் உள்ளான்சம்பவத்தன்று செந்தில் வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் லட்சுமி வீட்டில் வேலை பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது வீட்டு வாசல் வலியாக எலி ஒன்று வீட்டுக்குள் நுழைவதை கண்ட லட்சுமி அதனை அடிப்பதற்காக கையில் கம்பை எடுத்துக் கொண்டு துரத்தினார். எலியை கம்பால் அடித்தாலும் அந்த எலி அவரிடம் இருந்து தப்பிச்சென்று விட்டது.
எலியை துரத்தி வந்த வேகத்தில் சுவறில் சாய்ந்தபடி நின்ற அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் அப்படியே மயங்கி கீழே விழுந்தார்
இதனை கண்ட அவரது மகன் என்ன செய்வதென்று தெரியாமல் ஓடிச்சென்று அக்கம்பக்கத்தினரை அழைத்து வந்தான்
இதனையடுத்து லட்சுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் , உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் அவரை மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த சங்கர்நகர் போலீசார் லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரனை நடத்தி வருகின்றனர், 36 வயதான லட்சுமி உடல் பருமனாக காணப்பட்டதாலும், முறையான உடல் பரிசோதனைகள் செய்து கொள்ளாததாலும் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் பிணகூறாய்வுக்கு பின்னர் அவரது உரிழப்புக்காண உண்மை காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
35 வயதை தாண்டிய ஆண்களும் பெண்களும் தங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும் நடை பயிற்சி, எளிய உடல் பயிற்சிகள், உணவுக்கட்டுப்பாடு ஆகியவை மாரடைப்பை தடுக்கும் என்று மருத்துவர்கள் அறிவுவுறுத்துகின்றனர்.
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பதை உணர்ந்து ஒவ்வொருவரும் முறையான உணவு கட்டுப்பாடுகளுடன் தங்கள் உடலை முறையாக கவனித்துக் கொள்ள வேண்டியது அவசியம்..!