​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உக்ரைன் படைகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் அமெரிக்கா ஆயுத உதவி.. ஏவுகணைகளை வழங்க முடிவு..!

Published : Jun 18, 2022 12:54 PM

உக்ரைன் படைகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் அமெரிக்கா ஆயுத உதவி.. ஏவுகணைகளை வழங்க முடிவு..!

Jun 18, 2022 12:54 PM

அமெரிக்கா மற்றும் அதன் நேசநாடுகள், உக்ரைன் படைகளுக்கு பலம் சேர்க்கும் விதமாக பழைய மற்றும் மேம்படுத்தப்பட்ட ஹார்பூன் ரக கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்க முடிவு செய்துள்ளன.

உக்ரைன் வசம் 60 மைல் தூரம் சென்று தாக்கும் நெப்டியூன் வகை கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் குறைந்த அளவே உள்ள நிலையில், டென்மார்க் அரசு பழைய ஹார்பூன் ரக லாஞ்சரை வழங்க முன்வந்துள்ளது.

டிரக்குகளில் இருந்து ஏவும் வகையிலான பிளாக் 1 ஹார்பூன் ஏவுகணை 70 மைல் தூரம் சென்று தாக்கக்கூடிய நிலையில், பிளாக் 2 போயிங் 100 மைல்களுக்கு அப்பால் உள்ள இலக்கையும் தாக்கும் வல்லமை கொண்டது.

இதில் எந்த வகையிலான ஏவுகணைகளை அமெரிக்கா வழங்கவுள்ளது என குறிப்பிடப்படவில்லை.