திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ரயில்வே ஊழியரின் மனைவியிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவனை பொது மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
விராலிமலை சாலையில் மகளுடன் சென்ற ரயில்வே ஊழியர் மனைவி கோமளாவை மறித்த இருவர், கழுத்தில் கிடந்த 5 சவரன் தாலி சங்கிலியை பறிக்க முயன்றனர்.
நடப்பதை கண்ட ஆட்டோ ஓட்டுநர் கொள்ளையர்களை தப்ப விடாமல் சாலையில் ஆட்டோவை மறித்து நிறுத்தி தடுத்தார். ஒருவன் தப்பிய நிலையில் கையில் சிக்கிய விஜய் என்பவனை பொது மக்கள் குமுறினர்.
விஜயை கைது செய்து 5 சவரன் நகையை மீட்ட போலீசார் தப்பியோடிய நவீன் என்பவனை தேடி வருகின்றனர்.