​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரயில்களுக்குத் தீ வைப்பு-ரயில் நிலையங்கள் சூறை.. 40 ரயில்களை ரத்து செய்து ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு..!

Published : Jun 18, 2022 6:19 AM

ரயில்களுக்குத் தீ வைப்பு-ரயில் நிலையங்கள் சூறை.. 40 ரயில்களை ரத்து செய்து ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு..!

Jun 18, 2022 6:19 AM

அக்னிபத் திட்டத்திற்கு எதிராகப் போராட்டம் தொடர்ந்துவரும் நிலையில், வரும் 24 ஆம் தேதி முதல் இத்திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படையில் ஆள்சேர்ப்புப் பணி தொடங்க உள்ளது.

ராணுவத்துக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் 'அக்னிபத்' திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து 3 நாட்களாக போராட்டங்கள் நீடித்து வருகின்றன. இதனால் பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது.

12 மேற்பட்ட ரயில்களுக்கு வன்முறையாளர்கள் தீ வைத்திருப்பதாகவும், ரயில் சொத்துகள் சேதமடைந்திருப்பதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 94 விரைவு ரயில்கள் 140 பயணிகள் ரயில்கள் உள்பட 340 ரயில்களை ரத்து செய்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஏராளமான ரயில்கள் மாற்றுப் பாதைகளில் இயக்கப்படுவதால், முன்பதிவு செய்த பயணிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து போராட்டம் நீடித்து வரும் வழித்தடங்கள் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பீகாரில் உள்ள பிஹியா ரயில் நிலையத்தில் வன்முறை கும்பல் ரயில் நிலைய டிக்கட் கவுண்டரை சூறையாடி 3 லட்சம் ரூபாய் ரொக்கத்துடன் தப்பிச் சென்றது.