உக்ரைனுக்கு கூடுதலாக 1.5 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்க உள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
பெரும் பாதிப்பை சந்தித்துள்ள உக்ரைனுக்கு அடுத்த சில மாதங்கள் பொருளாதார ரீதியாக தாக்கு பிடிக்க 1.5 பில்லியன் டாலர் நிதி உதவி தொகுப்பை வழங்குவதாக உலக வங்கி அறிவித்தது.
இத்தொகை மூலம் அரசு மற்றும் சமூக ஊழியர்களுக்கு ஊதியம் உள்ளிட்டவற்றை உக்ரைன் அரசு வழங்க முடியும் என தெரிவித்துள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் தொடர்ந்து ஆதரவை அளிக்கும் என்று உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்துள்ளார்.