ஜெர்மனியில் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மத்திய ஜெர்மனியின் த்ரேசா நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த 58 வயதான நபர், ஷாப்பிங் செய்துக் கொண்டிருந்த 53 வயதான பெண்ணை நோக்கி சரமாரி சுட்டார்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்த பெண் உயிரிழந்தார். பின்னர், தான் வைத்திருந்த அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.