சீனாவின் ஜியாங்சியில் கனமழை மற்றும் வெள்ளத்தால் 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால், 80 மாவட்டங்களில் நீரில் மூழ்கின.
கனமழை அடுத்து ஏற்பட்ட நிலச்சரிவால் பல பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, தனிதனித் தீவுகளாக மாறின.
கனமழை தொடர வாய்ப்புள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, பாதுகாப்பு முகாம்களுக்கு செல்லுமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது.