கன்னியாகுமரியில், தம்பதியினர் போல நடித்து சூட்கேசில் வைத்து கஞ்சா விற்க முயன்ற ஐ.டி ஊழியரையும், ஒரு பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.
மார்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த தம்பதியை பிடித்து விசாரித்த போலீசார், அவர்களது சூட்கேஸை ஆய்வு செய்த போது அதில் 15 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், கன்னியாகுமரியைச் சேர்ந்த ராஜேஷ்வரன் என்ற அந்த இளைஞர் சென்னையில் ஐ.டி கம்பெனியில் பணியாற்றி வருவதும் அதிகம் பணம் சம்பாதிக்க எண்ணி கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அவன் போலீசிடம் சிக்காமல் இருக்க தம்பதியினர் போன்று காட்டிக் கொள்ள திருவண்ணாமலையைச் சேர்ந்த அஜந்தா என்ற பெண்ணை அழைத்து வந்ததும் தெரியவந்தது.