இந்தியாவின் 14 இடங்களில், சுமார் 42 ஆயிரம் கிலோ போதைபொருட்கள் நாளை அழிக்கப்பட உள்ளது.
குவகாத்தி, லக்னோ, மும்பை உள்ளிட்ட 14 முக்கிய நகரங்களில், இதுவரை கைப்பற்றப்பட்ட சுமார் 42 ஆயிரம் கிலோ போதைப்பொருட்கள், அதிகாரிகள் முன்னிலையில் நாளை அழிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை காணொலிக்காட்சி வாயிலாக காணும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிகாரிகள் மத்தியில் உரையாற்ற உள்ளதாகவும் மத்திய சுங்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது