உலகின் மிக உயரமான எவரெஸ்ட் மலைச்சிகரம் உள்ளிட்ட 4 மலைகளில் இருந்து சுமார் 34 டன் அளவிலான கழிவுகள் அகற்றப்பட்டதாக நேபாள ராணுவம் தெரிவித்துள்ளது.
நேபாள ராணுவத்தைச் சேர்ந்த குழுவினர் மலைச் சிகரங்களில் தூய்மைப் பணியை ஏப்ரல் மாதம் 5-ந்தேதி தொடங்கிய நிலையில், உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5-ஆம் தேதி நிறைவடைந்தது. எவரெஸ்ட், லோட்ஸே, கஞ்சென்ஜங்கா, மனாஸ்லு ஆகிய மலைகளிலிருந்து கழிவுகள் அகற்றப்பட்டன.
30 ராணுவத்தினர், மலையேற்ற வழிகாட்டிகள் 48 பேர், 4 மருத்துவர்கள் உள்ளிட்டோர் இதில் இடம்பெற்றிருந்தனர்.