அடுத்த 5 ஆண்டுகளில் கடல்சார் உற்பத்தி ஏற்றுமதியை 50 ஆயிரம் கோடியில் இருந்து ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிலையான மீன்பிடித்தல், கடலோரக் கப்பல் போக்குவரத்து மற்றும் மீன்வளர்ப்பை ஊக்குவிப்பதன் மூலம் இலக்கை அடைய முடியும் என்றார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாக கூறிய அவர், அதே நேரத்தில் இங்கிலாந்து மற்றும் கனடாவுடன் இதே போன்ற ஒப்பந்தங்களுக்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றார்.