மேற்கு வங்கம், சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு தீவிர மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வங்கக் கடலில் முதல் வட மாநிலங்கள் வரை நிலவும் வலுவான தென் மேற்கு பருவக் காற்றால் அசாம், அருணாசல பிரதேசம், மேகாலயா, நாகாலந்து, திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேநேரம் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய பரவலான மழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.