நாட்டின் முதல் புல்லட் ரயில் கண்டிப்பாக 2026ஆம் ஆண்டு இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நம்பிக்கை தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் சூரத்தில் அகமதாபாத்-மும்பை புல்லட் ரயில் திட்டப் பணிகளை அவர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அஷ்வினி வைஷ்ணவ், அகமதாபாத் மற்றும் மும்பை இடையே புல்லட் ரயிலுக்கான உள்கட்டமைப்பு கட்டுமானத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், பணிகள் அதிவேகத்தில் நடைபெறுவதாகவும் கூறினார்.
2026ஆம் ஆண்டில் சூரத் மற்றும் பிலிமோரா இடையே முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் என்றார்