தென்மேற்கு பருவமழை 3 நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கிய நிலையில், ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.
கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் வாட்டி வந்த நிலையில், நேற்று பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. சித்தூர், கர்னூல், கடப்பா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து, நகரின் பல பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டன. 10 மாவட்டங்களில் மின்னல் தாக்கம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது