வர்ரியா… மப்டியில் இருந்த பெண் போலீசிடம் வம்பு..! ஜெயிலுக்கு அனுப்பி வைத்த போலீஸ்
Published : Jun 07, 2022 6:24 AM
வர்ரியா… மப்டியில் இருந்த பெண் போலீசிடம் வம்பு..! ஜெயிலுக்கு அனுப்பி வைத்த போலீஸ்
Jun 07, 2022 6:24 AM
சென்னையில் இரவு பணிமுடிந்து சாதாரண உடையில் நின்ற பெண் காவலரிடம் வம்பு செய்த ரோமியோ இளைஞரையும், அவருக்கு ஆதரவாக கும்பலை அழைத்து வந்து பிரச்சனை செய்த ஆசாமியையும் போலீசார் கைது செய்தனர்.
சென்னை கானத்தூர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் பெண் போலீஸ் ஒருவர், அந்த பகுதியில் உள்ள வி.எச்.எஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உதவி ஆணையரின் தாயாருக்கு உதவியாrக இருந்து விட்டு, இரவு வீட்டிற்கு செல்ல சாதாரண உடையில் மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்துள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் தாடியுடன் வந்த கேடி ஒருவன், அவர் பெண் போலீஸ் என்று தெரியாமல் வர்ரியா என்று அழைத்துள்ளான். இதனால் அச்சம் அடைந்த பெண் போலீஸ் மருத்துவமனைக்குள் சென்று அங்கு இருந்த ஆயுதப்படை காவலரை உதவிக்கு அழைத்து வந்துள்ளார்.
அங்கேயே காத்திருந்த அந்த கேடி பாயோ, மீண்டும் வந்த பெண் போலீசை தனது வண்டியில் ஏறச்சொன்னதால் உடன் சென்ற காவலர் தட்டிக்கேட்க பிரச்சனை ஏற்பட்டது.
உடனடியாக அந்த இளைஞர் , கலிக்குன்றம் பகுதிக்கு சென்று தனது ஆதரவாளர்களை அழைத்து வந்துள்ளான். அவர்கள் கும்பலாக சேர்ந்து காவலருடன் தகராறு செய்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பெண் போலீசிடம் வம்பிழுத்த ரோமியோ இளைஞர் விக்னேஷையும் அவருக்கு ஆதரவாக ரகளையில் ஈடுபட்ட குணசேகரன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
இத்தனை களேபரங்களுக்கும் காவல் உதவி ஆணையர் ரவிக்குமார் தனது தாயாரை கவனித்துக் கொள்ள போலீசாரை பணியில் நியமித்ததுதான் காரணம் என்பதால் உயர் அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.