​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மேக் இன் இந்தியாவில் தளவாடம் : ரூ.76ஆயிரம் கோடி புதிய திட்டங்கள்!

Published : Jun 07, 2022 6:13 AM

மேக் இன் இந்தியாவில் தளவாடம் : ரூ.76ஆயிரம் கோடி புதிய திட்டங்கள்!

Jun 07, 2022 6:13 AM

இந்திய ராணுவத்தை நவீனப்படுத்த 76 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான ராணுவக் கொள்முதல் கவுன்சில் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில், இந்திய ராணுவத்தை நவீனப்படுத்தும் வகையில் மேக் இன் இந்தியா திட்டத்தில் உள்நாட்டிலே தளவாடங்களை தயாரிக்க 76 ஆயிரத்து 390 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

மேலும் கண்காணிப்பு, தேடுதல், கடலோர பாதுகாப்பு, ஊடுருவல் தடுப்பு, ரோந்து உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அடுத்த தலைமுறை Corvette வகை கப்பல்களை தயாரிக்க 36 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு அனுமதி அளித்தது. அடுத்த 5 முதல் ஏழு ஆண்டுகளில் 8 Corvette வகை கப்பல்களை நவீன முறையில் உள்நாட்டில் தயாரிக்க இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது.

இந்திய ராணுவத்திற்கு தேவையான பல்வேறு வாகனங்கள், பீரங்கிகள், பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், பாலம் அமைக்கும் டாங்கிகள் ஆயுதங்கள் கண்டறியும் ரேடார்கள் உள்ளிட்ட உள்நாட்டிலே தயாரிக்கும் தளவாடங்களை வாங்கவும் கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.