​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜப்பான், அமெரிக்காவில் செமிகண்டக்டர் சிப் தயாரிக்கத் தைவான் நிறுவனம் திட்டம்.!

Published : Jun 06, 2022 7:23 PM

ஜப்பான், அமெரிக்காவில் செமிகண்டக்டர் சிப் தயாரிக்கத் தைவான் நிறுவனம் திட்டம்.!

Jun 06, 2022 7:23 PM

வாகனங்கள், செல்பேசிகள், மின்னணுக் கருவிகள், கணினிகள் என அனைத்துக்கும் செமிகண்டக்டர் சிப் தேவைப்படுகிறது.

உலக நானோ சிப் சந்தையில் 84 விழுக்காட்டைத் தைவானும், 7 புள்ளி 6 விழுக்காட்டைச் சீனாவும் கொண்டுள்ளன.

உக்ரைனை ரஷ்யா முற்றுகையிட்டதுபோல், தைவானைச் சீனா முற்றுகையிட்டால் செமிகண்டக்டர் வழங்கல் தடைபட்டு, உலகப் பொருளாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகும்.

இத்தகைய காரணங்களால் 860 கோடி டாலர் மதிப்பீட்டில் ஜப்பானிலும், 1200 கோடி டாலர் மதிப்பீட்டில் அமெரிக்காவிலும் செமிகண்டக்டர் தயாரிப்புத் தொழிற்சாலைகளை அமைக்க டிஎஸ்எம்சி திட்டமிட்டுள்ளது.

சீனாவும் 2030ஆம் ஆண்டுக்குள் சிப் தயாரிப்பில் முதலிடத்தைப் பிடிக்கும் வகையில் பத்தாயிரம் கோடி டாலர் மானியம் வழங்கச் திட்டமிட்டுள்ளது