நாட்டிலேயே முதல் முறையாக புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
2030 ஆம் ஆண்டிற்குள் அந்த விமான நிலையத்தின் கார்பன் வெளியேற்றத்தை பூஜ்ஜியமாக்கும் நோக்கில் அங்கு படிப்படியாக மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
முதல்கட்டமாக அடுத்த 3 மாதங்களில் விமான நிலைய பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் 62 மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.