​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

Published : Jun 06, 2022 2:56 PM



ஆன்லைன் ரம்மி விளையாட்டால் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

Jun 06, 2022 2:56 PM

சென்னை மணலி புதுநகரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கந்தன்சாவடியில் உள்ள ஹெல்த்கேர் நிறுவனத்தில் பணி புரிந்து வந்த பவானி கடந்த 2016-ம் ஆண்டு தான் காதலித்து வந்த ஆந்திராவை சேர்ந்த பாக்கியராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2 ஆண்குழந்தைகள் உள்ளனர்.

கணவரும், பெற்றோரும் கண்டித்த போதும் ஆன்லைனில் கடந்த ஓராண்டாகவே ரம்மி விளையாடி வந்த பவானி, ஒருகட்டத்தில் அந்த விளையாட்டிற்கு அடிமையாகியுள்ளார். தனது 20 சவரன் நகைகளை அடமானம் வைத்து பெற்ற பணத்தை ரம்மி விளையாட்டில் இழந்த அவர், அது குறித்து கணவர் பாக்கியராஜிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் பாக்கியராஜ் ஒன்றரை லட்சம் பணம் கொடுத்து நகைகளை மீட்குமாறு கூறியுள்ளார். பின்னர் அந்த பணத்தையும், தனது தங்கைகளிடம் இருந்து பெற்ற 3 லட்சம் ரூபாய் பணத்தையும் சேர்த்து ரம்மி விளையாடி இழந்த அவர் மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில் நேற்றிரவு வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார்.

அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ள மணலி புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.