தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட 10 ஐம்பொன் சிலைகளை, சிலை திருட்டு தடுப்பு காவல் துறையினர் மீட்டு கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
தஞ்சை புன்னை நல்லூர் கைலாசநாதர் கோவிலின் நடராஜர் சிலை, நெல்லை ஆழ்வார்குறிச்சி கோவிலின் கங்காள மூர்த்தி மற்றும் நந்திகேஸ்வரர் சிலைகள் உள்ளிட்ட 10 ஐம்பொன் சிலைகள் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் இருந்து மீட்கப்பட்டது.
அவை வெளியுறவு துறை மூலம் தமிழக டிஜிபியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் கும்பகோணம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.