கன்னியாகுமரியில், திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி தொடங்கியதால், இன்று முதல் 5 மாதங்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலுக்கு நடுவே உள்ள 133 அடி உயர திருவள்ளூர் சிலை உப்பு காற்றினால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிலிக்கான் என்ற ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்போது ஒரு கோடி ரூபாய் செலவில் ரசாயனக் கலவை பூசும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.