தெலங்கானா மாநிலத்தில், ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த நபருக்கு, ஐந்து ரூபாய் மதிப்புள்ள சலவை சோப்பு வந்தது தொடர்பான மோசடி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிலாபாத் மாவட்டம் ஊட்டனூரை சேர்ந்த நபர் ஒருவர், கடந்த 5 நாட்களுக்கு முன் ஆன்லைன் தளத்தில் 6 ஆயிரத்து 100 ரூபாய் செலுத்தி செல்போன் ஆர்டர் செய்துள்ளார். ஆன்லைன் மூலம் வந்த பார்சலை திறந்து பார்த்த போது, அதில் செல்போனுக்கு பதில் சலவை சோப்பு இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து ஆன்லைன் நிறுவனத்துக்கு புகார் அளித்தும், அந்நிறுவனம் பதிலளிக்க மறுத்த நிலையில், பாதிக்கப்பட்ட நபர் போலீசில் புகார் அளித்தார்.