கேரள மாநிலம் விழிஞ்சியம் பகுதியில் இரண்டு குழந்தைகளுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நோரோ வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்படும். இதற்கு இன்னும் மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளின் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு ஆய்வு நடத்தி வருவதாகவும் வைரறு கண்டறியப்பட்ட பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். குழந்தைகள் இருவரின் நிலைமை சீராக இருப்பதாகவும் அவர் கூறினார்.