​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாவட்ட ஆட்சியர் வாட்ஸ்அப் முகப்பு புகைப்படத்தை பயன்படுத்தி மோசடி

Published : Jun 06, 2022 7:42 AM

மாவட்ட ஆட்சியர் வாட்ஸ்அப் முகப்பு புகைப்படத்தை பயன்படுத்தி மோசடி

Jun 06, 2022 7:42 AM

ஈரோடு மாவட்ட ஆட்சியரின் வாட்ஸ்அப் முகப்பு புகைப்படத்தை பயன்படுத்தி அமேசான் கிப்ட் வாயிலாக பண மோசடியில் ஈடுபட்ட வாட்ஸ்அப் எண்ணின் விவரங்களை சைபர் கிரைம் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வரும்  கிருஷ்ணன் உன்னியின்  புகைப்படத்தை முகப்பாக வைத்து கடந்த 1ந்தேதி வாட்ஸ்அப் வாயிலாக ஆட்சியருடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள், வி ஐ பிக்கள், பத்திரிகையாளர்கள் என பலருக்கு செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

அதில் அமேசான் கிப்ட் கார்ட் லின்க் அனுப்பி அதன் உள்ளே சென்றால் 10 கிப்ட் கார்டுகளுக்கு 10000 ரூபாய் வீதம் கிப்ட் அனுப்பினால் பரிசு எனக் கூறப்பட்டிருந்தது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த மோசடி நபரின் கை வரிசை எனத் தெரிய வந்ததை அடுத்து, அதனை கண்டறிய வாட்ஸ்அப் நிறுவனத்திடமிருந்து போலீசார் தகவல் கேட்டுள்ளனர்.