பார்வை குறைபாடு உள்ளவர்கள் எளிதில் கண்டறியும் வகையிலான சிறப்பு நாணய தொகுப்பை பிரதமர் மோடி இன்று வெளியிடுகிறார்.
மத்திய நிதி மற்றும் பெரு நிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் ஐகானிக் வார கொண்டாட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, கடந்த எட்டு ஆண்டுகளில் இரு அமைச்சகங்களிலும் மேற்கொண்ட பணிகள் குறித்த டிஜிட்டல் கண்காட்சியை துவக்கி வைக்கிறார்.
தொடர்ந்து ஒன்று, இரண்டு, ஐந்து, பத்து மற்றும் இருபது ரூபாய் மதிப்பிலான சிறப்பு நாணயங்களை பிரதமர் வெளியிடுகிறார். பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் எளிதில் கண்டறியும் வகையில் நாணயத்தில் குறியீடு பொறிக்கப்பட்டுள்ளது.