உலகம் முழுவதும் 27 நாடுகளில் சுமார் 800 பேருக்கு குரங்கு அம்மை தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக உறுதிப்படுத்தப்பட்ட தொற்று நோய் பாதிப்பு எண்ணிக்கை தற்போது 3 மடங்காக உயர்ந்துள்ளதாகவும், பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய இந்நோய், இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா உள்ளிட்ட 27 நாடுகளில் பரவி வருகிறது.