2030ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது எரிசக்தி தேவையில் 50 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பூர்த்தி செய்யும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதலுக்கு வளர்ந்த நாடுகளை குற்றம் சாட்டிய மத்திய அமைச்சர், வளர்ந்த நாடுகள் இயற்கையை சுரண்டுவதால் ஏற்படும் விளைவுகளை உலகம் எதிர்கொள்வதாக தெரிவித்தார்.
2030ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகா வாட் அளவுக்கு புதுப்பிக்கத்தக எரிசக்தி மூலம் ஒட்டுமொத்த எரிசக்தி தேவையில் 50 சதவீதத்தை இந்தியா பூர்த்தி செய்யும் என்றார். மேலும் 2030 ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வை இந்தியா ஒரு பில்லியன் டன்னாக குறைக்கும் என்றும் குறிப்பிட்டார்.