இலங்கையில் அதிபரின் அதிகாரங்களை குறைத்து, நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் அளிக்கும் 21வது சட்ட திருத்தம், அமைச்சரவையின் ஒப்புதலுக்கு இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
இலங்கையில் அதிபருக்கு வானளாவிய அதிகாரங்கள் கொடுக்கப்பட்டதால் தான், நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக எதிர்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இதையடுத்து 19வது சட்ட திருத்தத்தை ரத்து செய்து, நாடாளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் விதமாக அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ள அதிபர் கோத்தபய ஒப்புக் கொண்டதை தொடர்ந்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.