பராமரிப்பு பணி மற்றும் நிலக்கரி ஏற்றிச் செல்லும் ரயில்களை கூடுதலாக இயக்குவதற்கு ஏதுவாக நடப்பு ஆண்டில் 9 ஆயிரம் பயணிகள் ரயில்களை இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளது.
மின் பற்றாக்குறையை தீர்க்க அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரி விநியோகிக்க ஏதுவாக கூடுதல் சரக்கு ரயில்களை இயக்கும் வகையில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ஆயிரத்து 938 பயணிகள் ரயிலை இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளது.
தண்டவாள பரமாரிப்பு பணி உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு வழித்தடங்களில் 6ஆயிரத்து 995 ரயில்களை
ரத்து செய்ததாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்திய ரயில்வே பதிலளித்துள்ளது.