மேக் இன் இந்தியா திட்டத்தில் 36 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 போர்க் கப்பல்களை உள்நாட்டிலே தயாரிக்க இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது.
இந்திய கடற்படைக்காக corvette வகையை சேர்ந்த 8 போர்க் கப்பல்களை உள்நாட்டில் தயாரிக்க அனுமதி அளிப்பது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான ராணுவ கொள்முதல் கவுன்சில் இன்று ஆலோசனை நடத்துகிறது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு நிறுவனங்கள் கட்டுமான பணிகளில் ஈடுபட உள்ளதால் தற்சார்பு இந்தியா இயக்கத்திற்கு இந்த திட்டம் பெரிய அளவில் ஊக்கம் அளிக்கும் என கருதப்படுகிறது.
அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளுக்குள் கப்பல் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. corvette வகை கப்பல்கள் அதிக போர்த் திறன்களை கொண்டிருப்பதால் இந்திய கடற்படைக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிக்னல்கள் மற்றும் தகவல் தொடர்புகளுக்குப் பயன்படுத்தப்படும் மூன்று விமானங்களை 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கவும் இந்திய விமானப் படை திட்டமிட்டுள்ளது.