கருத்தடை அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழந்த விவகாரம்.. சந்தேக மரணம் என வழக்கு பதிந்து போலீஸ் விசாரணை!
Published : Jun 05, 2022 7:16 PM
கருத்தடை அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழந்த விவகாரம்.. சந்தேக மரணம் என வழக்கு பதிந்து போலீஸ் விசாரணை!
Jun 05, 2022 7:16 PM
சென்னையில், கருத்தடை அறுவை சிகிச்சைக்கு பின் பெண் உயிரிழந்தது தொடர்பாக சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போரூரை சேர்ந்த பெண் ஒருவர், சின்ன போரூர் அரசு சுகாதார நிலையத்தில் கடந்த 30-ம் தேதி, கருத்தடை சிகிச்சை செய்து கொண்ட நிலையில், நேற்று உயிரிழந்தார்.
இதனால், மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில், சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்