புதிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும் -மேற்கு நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை
Published : Jun 05, 2022 7:07 PM
புதிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும் -மேற்கு நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை
Jun 05, 2022 7:07 PM
உக்ரைனுக்கு தொலை தூர இலக்கை தாக்கும் ஏவுகணைகளை அமெரிக்கா வழங்கினால், புதிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என மேற்கு நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் 100 நாட்களை கடந்துள்ள நிலையில், நீண்ட தூர இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை வழங்குமாறு அமெரிக்காவிடம் உக்ரைன் கோரியுள்ளது. இந்நிலையில், இது குறித்து பேசிய புதின், அந்த ரக ஏவுகணைகள் வழங்கப்பட்டால், தாங்கள் இதுவரை தாக்காத இலக்குகளை தாக்குவோம் என கூறினார். எனினும், அந்த இலக்குகள் தொடர்பான விவரங்களை அவர் வெளியிடவில்லை.