இந்தியாவில் உள்ள பிரெஞ்சு குடிமக்கள் தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான பிரான்ஸ் சட்டமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
பிரான்ஸ் அதிபர் தேர்தலைத் தொடர்ந்து வெளிநாடுவாழ் பிரஞ்ச் குடிமக்கள் தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க இரண்டு கட்டமாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்ட தேர்தலில் 8 அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில் கேரளா, தமிழகம், புதுச்சேரியில் வசிக்கும் 4 ஆயிரத்து 463 பிரெஞ்சு குடிமக்கள் வாக்களிக்க ஏதுவாக புதுச்சேரியில் 2 மையங்களும் சென்னை, காரைக்காலில் தலா ஒரு மையமும் அமைக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு குடிமக்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்து வாக்களித்து வருகின்றனர்.