மகாராஷ்ட்ர மாநிலம் நாசிக்கில் நிலவும் கடும் வறட்சியால் ஆழ்கிணற்றில் சேறும் சகதியுமாக உள்ள தண்ணீரை மக்கள் எடுக்கும் அவலம் நீடிக்கிறது.
தண்ணீர் பற்றாக்குறையால் கிணறு வறண்டு காணப்படுகிறது. கிணற்றின் அடியில் எஞ்சியிருக்கும் சேற்றுநீரை சேகரித்து அதை வடிகட்டி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஒரு குடம் தண்ணீருக்காக ஏறத்தாழ மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு பெண்கள் அலைந்து திரிகின்றனர்.