​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நண்பர்களுடன் கடலில் குதித்து மாணவன் நீரில் மூழ்கிய நெஞ்சை பதற வைக்கும் காட்சி..! இது விபரீதத்தின் உச்சம்..!

Published : Jun 05, 2022 6:53 AM



நண்பர்களுடன் கடலில் குதித்து மாணவன் நீரில் மூழ்கிய நெஞ்சை பதற வைக்கும் காட்சி..! இது விபரீதத்தின் உச்சம்..!

Jun 05, 2022 6:53 AM

காசிமேடு கடலில் நண்பர்களுடன் குளிப்பதற்காக குதித்த பாலிடெக்னிக் மாணவன் நீச்சல் தெரியாமல் தத்தளித்து மூழ்கும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. கூடா நட்பு கேடாய் முடிந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

தண்டையார்பேட்டை, நேரு நகர், மெயின் தெருவைச் சேர்ந்தவர் ஏஜாஸ் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று தன்னுடன் படிக்கும் நண்பர்களுடன் காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் உள்ள சிமெண்டு வார்ப்பு பகுதியில் குளிக்க சென்றார்.

அப்போது, 3 நண்பர்களுடன் வார்ப்பு பகுதியில் இருந்து ஓடி வந்து கடலுக்குள் குதித்து விளையாடினர் இதனை மேலே இஎஉந்து சக நண்பர்கள் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். கடலுக்குள் குதித்த 3 பேரில் முகமது ஏஜாஸ் மட்டும் மீண்டும் மேலே எழ முடியாமல் தத்தளித்தார். ஆனால் அவரது நண்பர்கள் மேலே நின்றபடி சிரித்துக் கொண்டிருந்தனர்

ஒரு வழியாக போராடி மேலே வந்த ஏஜாஸ் தொடந்து தம்பிடிக்க இயலாமல் நீரில் மூழ்க அப்போது தான் நிலமையின் விபரீதம் உணர்ந்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனடியாக அருகில் இருந்த மீனவர்களை அழைத்தனர்

அப்போதும் கூட தங்களுடன் வந்த மாணவர்ன் கடலில் மூழ்கிவிட்டான் என்று கூறாமல் அண்ணா, அண்ணா என்று மட்டும் கூறிக் கொண்டு நின்றனர்

அதற்குள்ளாக ஏஜாஸ் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார், உடன் குதித்து நீரில் நீச்சலடித்துக் கொண்டிருந்த இரு நண்பர்களும் நீரில் மூழ்கிய நண்பரை காப்பாற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பது வீடியோவை பார்க்கும் போது தெரியவந்தது.

சம்பவ இடத்திற்கு வந்த காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் , தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து கடலில் மூழ்கி மாயமான முகமது ஏஜாஸ் தேடினர். உடல் கிடைக்கவில்லை, மீனவர் ஒருவர் தேடும் போது நீருக்கு அடியில் மாணவனின் உடல் கிடைத்தது

மாணவனின் சடலத்தை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முறையான நீச்சல் தெரியாமல் கடலில் குதிக்கும் விபரீத முயற்சிகள் மட்டுமல்ல உதவாத அவரது நண்பர்களும் உயிருக்கு ஆபத்து தான் என்று சுட்டிக்காட்டும் போலீசார், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை மிகுந்த எச்சரிக்கையுடன் வளர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.