இந்தியாவின் 56 ஆயிரம் டன் கோதுமையை கொண்டு செல்ல துருக்கி மறுத்துவிட்டது ஏன் என்று விசாரணை நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட 56 ஆயிரம் டன் கோதுமையை ஏற்காமல் துருக்கி அரசு திருப்பி அனுப்பிவிட்டது. இந்த சரக்குகள் ஐடிசி என்ற தரத்துக்குப் பேர் போன இந்திய ஏற்றுமதி நிறுவனம் மூலம் அனுப்ப்பட்டு இருந்தது.
இந்திய கோதுமையை துருக்கி மறுத்துவிட்டது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்த கோதுமையை நெதர்லாந்துக்கு ஐடிசி விற்பனை செய்துள்ளது.
ஆனால் துருக்கி கொண்டு செல்லப்பட்ட இருப்பது ஐடிசி நிறுவனத்துக்குக் கூடத் தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டார். இந்த சரக்குகளில் ருபெல்லா வைரஸ் இருப்பதாக கூறி துருக்கி ஏற்க மறுத்து விட்டது.
இதற்கு அரசியல் உள்நோக்கம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இன்று உலகமே கோதுமைக்காக காத்திருக்கும் நிலையில் ஒரு நாடு வேண்டாம் என்று நிராகரித்துவிட்டால் அதனால் நட்டமில்லை என்றும் கோதுமையின் அருமை தெரிந்த இதர நாடுகளுக்கு அனுப்பி வைப்போம் என்றும் பியூஷ் கோயல் தெரிவித்தார்.