நீண்ட தூர இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை அமெரிக்காவிடம் கோரியுள்ள உக்ரைன், ரஷ்ய நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து பேசிய அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதரான ஒக்சானா, தங்கள் நாட்டை பாதுகாக்க நீண்ட தூர இலக்கை தாக்கும் ஏவுகணைகள் தேவைப்படுவதாக கூறினார்.
அந்த ஆயுதங்கள் தொடர்பாக அமெரிக்காவுடன் உக்ரைன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், ரஷ்யப் படைகளால் நடத்தப்படும் குற்றச்செயல்கள் எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் அந்நாட்டின் மீது உக்ரைன் தாக்குதலை நடத்தாது என்றும் ஒக்சானா தெரிவித்துள்ளார்.