உத்தரபிரதேசம் மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பாய்லரில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த 15 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள ஹாபூர் ஐ.ஜி பிரவீன் குமார், விபத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.