சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காவனூர் கிராமத்தில் நள்ளிரவில் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் அசைவ திருவிழா நடைபெற்றது.
கருப்பர் சாமிக்கு கிடா வெட்டி படையலிட்டால் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது கிராம மக்களின் ஐதீகம் என்பதால் ஆண்டுதோறும் இத்திருவிழா நடைபெற்று வருகிறது.
அதன்படி நள்ளிரவு நடைபெற்ற அசைவ திருவிழாவில் 100 ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்திய பின்னர் கறி விருந்து தயார் செய்யப்பட்டது.
இதனை காவனூர் கிராமத்தை சேர்ந்த ஆண்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாப்பிட்டுவிட்டு இலையை எடுக்காமல் சென்றனர். இலை காய்ந்த பின்பு கிராம பெண்கள் இலையை எடுத்தனர்.