பங்குகளை எலான் மஸ்க் வாங்கும் ஒப்பந்தத்திற்கான காத்திருப்பு காலம் முடிவடைந்து விட்டதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்த நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் 4400 கோடி டாலர் விலைக்கு வாங்க டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் விருப்பம் தெரிவித்திருந்தார். பின்னர்,போலி டுவிட்டர் பயனர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை பெறுவது தாமதமாவதாக கூறி தற்காலிகமாக ஒப்பந்தம் நிறுத்தப்படுவதாக எலான்மஸ்க் அறிவித்தார்.
இந்நிலையில் எலான் மஸ்கிற்கான காத்திருப்பு காலம் சட்டப்படி முடிந்து விட்டதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இனி ஒப்பந்தத்தை முடிப்பது பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெறுவது போன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்றும் டுவிட்டர் குறிப்பிட்டுள்ளது.