சிலி நாட்டில் பூங்காவில் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை அகற்றும் நாய்.!
Published : Jun 03, 2022 7:33 PM
சிலி நாட்டின் தலைநகர் சான்டியாகோவில் உள்ள பூங்காவில் நாய் ஒன்று, பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற உதவி வருகிறது.
சாம் என பெயரிடப்பட்டிருக்கும் ஐந்தரை வயதான அந்த நாயை, அதன் உரிமையாளர் கோன்சலோ சியாங் பூங்காவுக்கு நடைபயிற்சிக்காக தினமும் அழைத்து வருகிறார்.
அப்போது அந்த நாய் பூங்காவில் இருக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள், முகமூடிகள், கேன்கள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றி பூங்காவை தூய்மையாக வைத்திருக்க உதவுகிறது. பூங்கா ஊழியர்கள் அந்த நாயை சூப்பர் ஹீரோ என்றழைக்கின்றனர்.