​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி - டெல்லி நீதிமன்றம்

Published : Jun 03, 2022 7:16 PM

கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி - டெல்லி நீதிமன்றம்

Jun 03, 2022 7:16 PM

விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சீன நாட்டவர்களுக்கு சட்டவிரோதமாக விசா பெற்றுத்தர லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறது.

இது தொடர்பான விசாரணைக்கு, கார்த்தி சிதம்பரம் அண்மையில் ஆஜரானார். இந்நிலையில், கைது நடவடிக்கையை தடுக்கும் நோக்கில், அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.