உணவகங்களில் வாடிக்கையாளர்களிடம் சேவைக் கட்டணம் பெறுவதைத் தடுக்க விரைவில் விதிமுறைகள் வகுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நுகர்வோர் விவகாரங்கள் துறையின் வழிகாட்டுதலின்படி உணவின் விலை மற்றும் வரிகளை மட்டுமே வாடிக்கையாளரிடம் பெறலாம் என்றும், வாடிக்கையாளரின் ஒப்புதல் இன்றி அவரிடம் சேவைக்கட்டணம் பெறுவது முறையற்ற வணிக நடவடிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளது.