காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் பிரியங்கா காந்திக்கு, கொரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா பாதிப்பு உறுதி படுத்தப்பட்ட நிலையில், இன்று பிரியங்கா காந்திக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்ட அவர், தனக்கு லேசான அறிகுறியுடன் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாவும் தெரிவித்துள்ளார்.