காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, காவல்துறை டிஜிபி உள்ளிட்டோருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு அப்பாவி மக்கள் இரையாகி வரும்நிலையில், பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று இரவு ஒருமணி நேரம் அமித்ஷாசை சந்தித்துப் பேசினார்.
காஷ்மீரில், 4,000க்கும் மேற்பட்ட பண்டிட் சமூகத்தினர் அரசு ஊழியர்களாக உள்ளனர். இவர்கள், தங்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படாவிட்டால், வெளியேறப் போவதாக அறிவித்துள்ளனர்.
இதையடுத்து, காஷ்மீர் பண்டிட்டுகள் வசிக்கும் முகாம்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் வெளிமாநிலத்தவரை குறிவைத்தும் தாக்குதல்கள் நடத்தப்படுவது குறித்து அஜித் தோவலுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.